Thursday, August 5, 2010



ரஜினியும் அமிதாப்பும்

எனக்கு பார்வர்ட் மெயிலில் வந்ததை இங்கு தமிழாக்கி தந்திருக்கிறேன். இந்த மெயில் சில வருடங்களுக்கு முன்பே வந்திருந்தாலும் எந்திரன் வெளியாகும் சமயத்தில் இதைப் பற்றி எழுதுவது இன்னும் பொருத்தமாக இருக்குமென்று நினைக்கிறேன்.


ரஜினி நீண்ட காலமாக அமிதாப்பிடம், "அமிதாப்ஜி, இந்த உலகத்துல எனக்கு எல்லாரையும் தெரியும். யார யார வேணாலும் சொல்லுங்க, அவுங்கள எனக்குத் தெரியும்" என்று சொல்லி நச்சரிக்கிறார். ரஜினியின் நச்சரிப்பைத் தாங்காமல் ஒரு நாள், "ரஜினி, உங்களுக்கு டாம் க்ருஸ் தெரியுமா?" என்று கேட்கிறார்.

அதற்கு ரஜினி, "கண்ணா, நானும் டாம்-வும் ரொம்ப நாள் ப்ரெண்ட்ஸ். ஜுஜூபி அத இப்பவே காட்டுறேன்" என்று சொல்லி இருவரும் அமெரிக்காவில் இருக்கும் டாம் க்ரூஸ் வீட்டிற்கு செல்கின்றனர். அங்கு டாம் க்ரூஸ் ரஜினியை பார்த்ததும், "ஆ தலைவா, என்ன இந்த பக்கம்" என்று கேட்டுவிட்டு இருவரையும் மதிய உணவை அங்கேயே சாப்பிட்டுவிட்டு போகச் சொல்கிறார்.

அமிதாப்பிற்கு இது நம்பும்படியாக இருந்தாலும் ரஜினிக்கு டாம்-ஐ தெரிந்தது அதிர்ஷ்டவசமானது என்று நினைக்கிறார். இதைத் தெரிந்து கொண்ட ரஜினி வேறு யாருடைய பெயரையாவது சொல்லச் சொல்கிறார். அமிதாப் உடனே, "அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவைத் தெரியுமா?" என்று கேட்கிறார். ரஜினியும், "தெரியுமே" என்று சொல்லி அமிதாப்பை வெள்ளை மாளிகைக்கு அழைத்துச் செல்கிறார்.

வெள்ளை மாளிகையில் ரஜினியைப் பார்த்த ஒபாமா, "ஹேய் ரஜினி, என்ன ஆச்சர்யம்!! இப்பத்தான் ஒரு மீட்டிங்குக்கு கிளம்பிகிட்டு இருந்தேன். நீங்களும் உங்க ப்ரெண்டும் வர்றீங்க..சரி நாம மொதல காபி சாப்பிட போலாம், மீட்டிங்க நான் அப்புறம் பாத்துக்குறேன்" என்று சொல்லி காபி சாப்பிட அழைத்துச் செல்கிறார், இதைக் கேட்ட அமிதாப்பிற்கு பேரதிர்ச்சி, இருந்தாலும் அவரது சந்தேகம் இன்னும் தீரவில்லை. ரஜினி வேறொரு பெயரைச் சொல்லச் சொல்கிறார்.

இம்முறை அமிதாப், "போப்-ஐ தெரியுமா?" என்று கேட்கிறார். இருவரும் உடனே வாடிகனில் போப் இருக்கும் இடத்திற்கு செல்கின்றனர். அங்கு இருக்கும் மக்கள் கூட்டத்தைப் பார்த்த ரஜினி, "இவ்வளவு கூட்டத்துல போப் என்னை கண்டுபிடிக்க முடியாது. எனக்கு இங்க உள்ள செக்யூரிட்டிஸ்லாம் தெரியும். அதனால நான் உள்ள போயி போப்போட பால்கனில வந்து நிக்குறேன்" என்று சொல்லி அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

சுமார் அரை மணிநேரம் கழித்து, ரஜினி போப் உடன் பால்கனியில் வந்து நிற்கிறார். இந்நேரம் பார்த்து அமிதாப்பிற்கு நெஞ்சு வலி. அங்கிருக்கும் டாக்டர்கள் உடனே அமிதாப் இருக்குமிடத்திற்கு விரைகின்றன்ர். ரஜினியும் அங்கு வந்து, "அமிதாப், என்னாச்சு திடீர்னு??" என்று கேட்கிறார். அதற்கு அமிதாப், "நீங்களும் போப்-ம் வர வரைக்கும் நல்லாத்தான் இருந்தேன். நீங்க ரெண்டு பேரும் வந்தத பாத்ததும் பக்கத்துல இருந்த ஒரு இத்தாலியன் ஒன்னு கேட்டான்".
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*

*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
ஆமா ரஜினி பக்கத்துல ஒருத்தர் நிக்கிறாரே, யாரு அவரு???




10 comments:

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

கலக்கல்!.

பழூர் கார்த்தி said...

சூப்பர்பா.. செம சிரிப்பு... ஹா ஹா ஹா..விழுந்து விழுந்து சிரித்தேன்.. ஒரு டெவலப்பருக்கு இவ்ளோ மூளையா எல்லாரும் பொறாமைப் பட போறாங்க :-)))

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

ரஜினி rockssssssssssssss

ராஜா said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.

@பழுர் கார்த்தி,
உங்கள் கருத்துக்கு பதிலளித்தால், அது டெவலப்பர்ஸ்க்கும் டெஸ்டர்ஸ்க்கும் இங்கும் சண்டையை மூட்டி விடலாம். ஆகையால் அதைப் பற்றி இங்கு கருத்து கூற விரும்பவில்லை. நீங்க ஒரு டெஸ்டர்ங்கிறதயும் யார்ட்டயும் சொல்லல :)

Anonymous said...

Yenga ethe than koncha nal munnadi J and Rajini vechu vantharhu

ttpian said...

nalla kooththu

ராஜா said...

@Anonymous

எனக்கும் இந்த மெயில் இரு வேறு மாதிரியாக வந்தது. முதல் மெயில் சுமார் 4 வருடங்களுக்கு முன் வந்தது, அதில் யாரோ ஒரு ஹாலிவுட் நடிகரும் ரஜினியும் பேசுவது போலிருந்தது. போன மாதம் வந்த இரண்டாவது மெயிலில் அமிதாப்.

அமிதாப்பும் ரஜினியும் நண்பர்கள் என்பதால் அது கொஞ்சமாவது பொருத்தாமாக இருக்குமென்றே அமிதாப் பெயரை இங்கு பயன்படுத்திக் கொண்டேன் :)

விக்னேஷ்வரி said...

ஹாஹாஹா.. சூப்பர்.

எப்பூடி.. said...

சூப்பர் சார், எப்படியும் நாளை இதை ஒரு பத்துப் பேரிடமாவது சொல்வேன்.

ராஜா said...

@விக்னேஷ்வரி & எப்பூடி..

உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி.

@எப்பூடி..

என்னை சார் என்று சொல்லி அழைக்குமளவுக்கு நான் ஒன்றும் பெரிய ஆளுமில்லை, வயதும் அதிகமில்லை. ஆகையால் நீங்கள் தாராளமாக என்னை பெயர் சொல்லியே அழைக்கலாம் :)

Post a Comment