Tuesday, September 7, 2010



சுதந்திர தினத்தன்றும் மின்வெட்டுக்குச் சுதந்திரம் இல்லை

சுதந்திர தினம் வந்த வீக் என்ட் எப்படி கஷ்டப்பட்டு ஊருக்குப் போனேனு என்னோட போன பதிவை படிச்சவங்களுக்கு தெரியும். அத படிக்காதவங்க இத (சென்னையிலிருந்து மதுரை - வழி: தாம்பரம்) க்ளிக் பண்ணி படிச்சீக்கோங்க (எப்படியெல்லாம் நம்ம ப்ளாக்-அ படிக்க வைக்க வேண்டியிருக்கு).

பெரும்பாலும் ஊருக்கு (மதுரை) போனேனா, வீட்லயேதான் இருப்பேன். எங்கயும் சுத்துறதுலாம் கிடையாது. நல்லா தூங்குறது, சாப்பிடுறது அப்புறம் டிவி பாக்குறது..அங்க இதான் நம்ம பொழுதுபோக்கு. இதுக்கு எதுக்கு ஊருக்கு போகனும் அத இங்கயே பண்ணலாமேனு இத படிக்கிற சில பேருக்கு தோணலாம். என்ன பண்றதுங்க, என்ன இருந்தாலும் வீட்டுச் சாப்பாடு மாதிரி வருமா அதுவும் அம்மா கையால பண்ணதுனா சொல்லவே வேணாம் (எப்படியோ பெண் ரசிகைகளுக்கு நாம இன்னும் பேச்சிலர்தான்னு சொல்லியாச்சு)..சரி மேட்டருக்கு வருவோம்.

எங்க ஏரியாவுல தினமும் 2 மணிநேரம் பவர் கட் பண்ணிடுவாங்க. அந்த ரெண்டு மணி நேரம் எப்போங்கிறது ஒவ்வொரு மாசமும் மாறும். ஆகஸ்ட் மாசம் முழுசும் காலை 10-12. பொதுவா தீபாவளி, பொங்கல் மாதிரி பண்டிகை நாள்லலாம் பவர் கட் இருக்காது. அதனால சுதந்திர தினத்தன்னைக்கும் கரன்ட் போகாதுனு நினைச்சேன். படுபாவி பசங்க கரண்ட்-அ அன்றைக்கும் ஆஃப் பண்ணி தங்களோட கடமை உணர்வை காட்டிட்டாங்க நம்ம மின்வாரியம். அந்த 10-12ல ரெண்டு மூணு நிகழ்ச்சிலாம் பாக்கணும்னு ப்ளான் பண்ணிலாம் வேற வச்சிருந்தேன். எல்லாம் போச்சு.


[என்ன தேடுறீங்க, பவர் கட்-ங்க அதான் படத்துல ஒன்னுமில்ல :) ]

வெளிய சுத்தப் போறதுக்கும் சோம்பேறித்தனம். என்ன பண்ணலாம்னு உக்காந்து யோசிச்சேன், மல்லாந்து படுத்து யோசிச்சேன். குப்புற படுத்து மட்டும் யோசிக்கல. ஏன்னா கரண்ட் இல்லாதப்ப குப்புற படுத்தா சீக்கிரம் வேர்க்கும்ல அதான் :). கொஞ்ச நேரத்துக்கு எதுவும் தோணல. அப்புறம்தான் ஒண்ணு தோணிச்சு..இப்படி டெய்லி ரெண்டு மணி நேரம் கரண்ட் கட் பண்றாய்ங்களே..இவய்ங்கலாம் மக்கள், மக்கள் நலனைப் பத்திலாம் யோசிக்க மாட்டாய்ங்களா. மதுரைல உள்ளவன் ஓட்ட போட்டாலும் ஒரு ஓட்டோட மதிப்பு ஒன்னுதான். சென்னைல உள்ளவன் போட்டாலும் ஒரு ஓட்டோட மதிப்பு ஒன்னுதான். அப்புறம் சென்னைல மட்டும் மின்வெட்டு இல்ல, மத்த ஊர்ல எல்லாம் ரெண்டு மணி நேர மின்வெட்டு. அறிவிக்கப்படாத மின்வெட்டையும் சேத்தா 6 மணிநேரம் வரையும் போகுமாம்.

வளர்ச்சித் திட்டங்களும் பாத்தீங்கணா அதுவும் சென்னைய சுத்திதான் இருக்கு. இந்த மெட்ரோ ரயில் திட்டத்துக்கே 14000 கோடி பட்ஜெட்னு கேள்விப்பட்டேன். அந்த திட்டம் முடியும் போது பட்ஜெட் எவ்வளவு எகிறுமோ. இவ்வளவு பணத்தை மத்த மாவட்டங்களோட வளர்ச்சிக்கு பயன்படுத்தினா அந்த மாவட்டத்து மக்கள் ஏன் சென்னைக்கு வரப் போறாங்க, சென்னைல ஏன் மக்கள்தொகை பெருகப் போகுது. பொதுவா தலைநகரத்துல மத்த நகரங்களை விட வளர்ச்சி அதிகமாகத்தான் இருக்கணும்(அப்படி இல்லனா அது தலைநகரமே அல்ல). ஆனா இங்க என்னடானா தலைநகரத்துல மட்டும்தான் வளர்ச்சி இருக்கு.

இப்படி ஏகப்பட்டதுல நம்ம அரசியல்வாதிகள் மேல கோபம், வெறுப்பு. இந்தியா சுதந்திரம் வாங்குனப்ப இருந்த நேர்மையான அரசியல்வாதிகள்லாம் இப்பயும் இருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்னு வேற அப்பதான் தோணிச்சு. ஒரு வேளை இந்த மாதிரி நாம அப்பப்ப அவங்களை நினைச்சு பாக்கணும்தான் அடிக்கடி நம்ம அரசு பவர் கட் பண்ணுதோ?!?!

சமீபத்தில் பவர் கட் பற்றிய கலைஞரின் பொன்மொழினு எஸ்எம்எஸ்ஸில் வந்தது கீழே.

கருவறையும் இருட்டு
கல்லறையும் இருட்டு
இதை உணர்த்தவே அடிக்கடி பவர் கட்(டு)!!
- கலைஞர்