Thursday, July 15, 2010



இது என் வேலை அல்ல

சமீபத்தில எனக்கு ஒரு மெயில் வந்துச்சு, அதுல நம்ம நெடுஞ்சாலை துறையோட கடமை உணர்வை ஒரு படத்துல காட்டியிருந்தாங்க (கீழே பார்க்கவும்).




ரோட்டோரமா ஒரு மரக்கிளை இருக்கு, அதைக் கூட எடுத்து போடாம அதை சுற்றி பெயின்ட் அடிச்சு கடமையே கண்ணா இருந்தவரை நினைச்சா அப்படியே புல்லரிக்குது.

இந்த படத்தை பார்த்ததும் எனக்கு இன்னொரு ஜோக் வேற ஞாபகம் வருது. ரோட்டோரமா ஒருத்தன் சின்ன சின்ன குழியா வெட்டிட்டே போனானாம். பின்னால வந்த ஒருத்தன் அந்த குழியை எல்லாம் மூடிட்டே வந்தானாம். அந்த பக்கமா போன ஒருத்தருக்கு இதைப் பார்த்து ஒரே குழப்பம். சரி அவங்ககிட்டயே கேட்டுடலாம்னு குழியை மூடுறவனை கூப்பிட்டாரு. "ஏம்பா, குழியை வெட்டுறீங்க..ஆனா எதுவும் பண்ணாமலயே குழியை மூடுறீங்களே, என்ன விஷயம்?"னு கேட்டாரு. அதுக்கு அவன், "குழி வெட்டுனதுக்கப்புறம் ஒரு ஆளு அதுல செடியை வைக்கனும், அவரு இன்னைக்கு வரலை"னு சொல்லிட்டு திரும்ப அவன் வேலைய பாக்க போயிட்டானாம்.

என்ன ஒரு கடமை உணர்ச்சி அவங்களுக்கு!! இப்படி எல்லாருமே நாம உண்டு நம்ம வேலை உண்டுனு இருந்தா 2020 என்ன 2015-லயே நம்ம நாடு வல்லரசாயிடும், என்ன சொல்றீங்க?!?!