Monday, July 27, 2009



காதலைச் சொன்னால் ஏற்க மறுக்க பெண்கள் சொல்லும் காரணங்கள்

பசங்க பொண்ணுங்ககிட்ட காதலைச் சொன்னா, பெரும்பாலான பொண்ணுங்க உடனே ஏத்துக்கிறது இல்ல. ஏதாவது ஒரு காரணத்த சொல்லி மறுத்துடுவாங்க. அப்படி சொல்ற காரணங்கள்ல சிறந்த 10 காரணங்களை இங்க வரிசைப்படுத்தி இருக்கேன்.

10. இல்ல (மணி ரத்னம் படம் ரொம்ப பாக்குறவங்களா இருப்பாங்களோ!!)

9. ச்சீ, என்னைப் பத்தி தப்பா நெனைச்சிட்டியே (நல்ல விதமா நெனைச்சாதான காதலையே சொல்லுவாங்க?!?!)

8. காமெடிதான பண்ற?? (நீ ஒன்னும் என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலயே)

7. நான் உன்ன ஒரு நல்ல ப்ரெண்டாதான் பாத்தேன் (பண்றதுலாம் பண்ணிட்டு இத வேற சொல்லுங்க)

6. எனக்கு காதல்ல நம்பிக்கை இல்ல (காதல் மேல இல்லயா, இல்லை காதல சொன்னவன் மேல இல்லயா??)

5. எங்க குடும்பத்தில பிரச்சனை வரும் (எதுலயுமே பிரச்சனை வரக்கூடாதுனா எப்படிமா?)

4. ஒழுங்கா படிக்கிற வேலைய பாரு (அது வந்தா நாங்க ஏன்மா உங்க பின்னால சுத்துறோம்)

3. இது ஒரு வகையான ஈர்ப்புதான் (காந்தமா ஈர்க்கிறதுக்கு??)

2. அண்ணா (என்னது அண்ணாவா, எல்லாரும் இப்படியே சொன்னா நாங்க யாரைத்தான் லவ் பண்றது)

.

.

.

.

.

.

.

.

.

.

1. சாரி, நான் ராஜாவை லவ் பண்றேன்.

பல பேருக்கு யாரு அந்த ராஜானு அப்ப குழப்பமா இருந்திருக்கும், அது வேற யாருமில்ல நான்தான்..இப்ப உங்க குழப்பம்லாம் தீர்ந்திருக்கும்னு நினைக்கிறேன், சில பேரு இதயத்தில டிரான்ஸ்பார்மர் வெடிக்கிற சவுண்டு வேற கேக்குது.. என்ன பண்றதுங்க உண்மையை எவ்வளவு நாளைக்குதான் மறைக்க முடியும், அதான் இன்னைக்கு போட்டு உடைச்சிட்டேன்!!




9 comments:

K,Kaliraj said...

Very Good. Really good observation. Keep it up

ராஜா said...

காளிராஜ், உங்கள் கருத்துக்கு நன்றி..

தினேஷ் said...

nalla irukku

ராஜா said...

நன்றி சூரியன்..

பழூர் கார்த்தி said...

யோவ் ராஜா, கலக்குறீங்கய்யா..
இவ்ளோ திறமையை இவ்ளோ நாளா எங்கய்யா ஒளிச்சி வச்சிகிட்டு இருந்தீங்க???

எல்லா காரணங்களுமே வெடிச் சிரிப்பை வரவழைத்தன :-)))

தொடர்ந்து கலக்குங்க ராஜா!!

பழூர் கார்த்தி said...

அது சரி, நிஜமாவே உங்களை ஒரு பொண்ணு லவ் பண்ணுதா? அந்த் பொண்ணு யாருங்க? பேரு என்ன? எங்கிட்டு வேலை பாக்குது?

பழூர் கார்த்தி said...

இந்த பதில்கள்ல எத்தனை பதில்களை எத்தனை பெண்களிடமிருந்து நீங்க வாங்கி இருக்கீங்க???

ராஜா said...

கார்த்தி,

இடுகைல முத பத்திய நல்லா படிச்சு பாருங்க, பெரும்பாலான பெண்கள் சொல்லும் காரணங்கள்னு சொல்லிருக்கேன். அதனால நம்மள ஒரு பொண்ணு லவ் பண்ணல, பல பேரு பண்றாங்க..எல்லார பத்தியும் இங்க சொல்ல முடியாது.

அப்புறம் உங்கள மாதிரி நண்பர்கள் எங்கிட்ட புலம்புனதுதான் இந்த காரணங்கள்லாம்..

Praveena said...

உங்கள் பதிவு நன்றாக உள்ளது.
கூகுளின் புதிய அறிமுகம் ஜெயகு . உங்கள் வலைத்துவை பிரபலபடுத்த சிறந்த வழி.
Link:www.secondpen.com/tamil/what is jaiku?

Post a Comment