Sunday, July 12, 2009



மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த குலாம் நபியின் யோசனை

இன்னைக்கு டைம்ஸ் ஆஃப் இந்தியா பேப்பர்ல மக்கள்தொகையை கட்டுப்படுத்த 30 வயசுக்கு மேல கல்யாணம் பண்ற கிராமத்து மக்களுக்குத்தான் பரிசுத்தொகை வழங்கணும்னு மத்திய சுகாதரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் சொன்னதா போட்டிருந்தது. (ஸப்பா எப்படியோ நானும் பேப்பர் படிக்கிறேனு காண்பிச்சாச்சு அதுவும் இங்கிலீஷ் பேப்பர்!!)

முதல்ல என்னடானா அரசாங்கம் 'நாம் இருவர் நமக்கு இருவர்'னு சொல்லிச்சு, அப்புறம் 'நாம் இருவர் நமக்கு ஒருவர்'னு சொல்லிச்சு. இப்பவே சில லாரி, ஆட்டோல எல்லாம் 'நாமே குழந்தை நமக்கேன் குழந்தை'னு வேற போட ஆரம்பிச்சிட்டாங்க.

அமைச்சர் சொல்றத வச்சு பாத்தா, இன்னும் கொஞ்ச நாள்ல 40 வயசுக்கு மேலதான் கல்யாணமே பண்ணனும்னு சட்டம் போட்டாலும் ஆச்சர்யப்படுறதுக்கில்ல. ஏன் அப்படி சொன்னீங்கனு கேட்டதுக்கு 18 வயசுக்கு அப்புறம் கல்யாணம் பண்ணி பேமிலி பிளானிங் பண்றவங்க எல்லாம் சட்டத்ததான் ஃபாலோ பண்றாங்கனு வேற சொல்லிருக்காரு.

அரசாங்கம் நல்ல விஷயமே சொன்னாலும் காசு குடுத்து சொன்னாதான் மக்கள் கேட்பாங்கற அளவுக்கு அவங்கள பழக்கி வச்சிருக்காங்க. போதிய படிப்பறிவு இருந்தா போதும் மக்கள்தொகைய கட்டுப்படுத்த என்ன பண்ணனும்னு அவங்களே புரிஞ்சுப்பாங்க. அதுக்கு என்ன பண்ணலாம்னு யோசிக்கிறத விட்டுட்டு 30 வயசுல கல்யாணம் பண்ணனும், 50 வயசுல கல்யாணம் பண்ணனும் சொல்றது எல்லாம் தேவையில்லாத விஷயம்.

அது மட்டுமில்ல இன்னொன்னும் சொல்லிருக்காரு, கிராமபுறங்கள்ல போதிய மின் வசதிய கொண்டு வர்றதும் மக்கள்தொகைய கட்டுப்படுத்துமாம்.

அப்ப தமிழ்நாட்டுல மக்கள்தொகை பெருக்கம் வழக்கத்த விட ஜாஸ்தியா இருந்துச்சுனா, அதுக்கு ஆற்காட்டாரையும் திமுக அரசையும் தான் காரணமா சொல்லணும். ஏன்னு உங்களுக்கு எல்லாம் நல்லாவேத் தெரியும். அப்படி பாத்தா ஒரு மாநில அரசே மக்கள்தொகை பெருக்கத்துக்கு துணை போகுது, அதுக்கு மத்திய அமைச்சர் என்ன சொல்லப் போறாரோ?!?!




3 comments:

ஐந்திணை said...

வழக்கம்போலத்தான் சொல்வார்!

பழூர் கார்த்தி said...

வாழ்த்துக்கள் ராஜா, நல்லா எழுதியிருக்கிங்க..

பதிவுலகத்திற்கு உங்களை வாழ்த்தி வரவேற்கிறேன்..

தொடர்ந்து நிறைய எழுதுங்கள் :-)

<<>>

அது எப்படிங்க, மின்சாரம் இருந்தா மக்கள் தொகை குறையுமா??

ராஜா said...

ஐந்தினை, உங்கள் கருத்துக்கு நன்றி.

என்னுடைய வலைப்பதிவில் பின்னூட்டமிட்ட முதல் நபர் நீங்கள்தான்..

******

பழூர் கார்த்தி, உங்களுடைய வாழ்த்துக்கு நன்றி

மின்சாரம் இருந்தா மக்கள் பின்னிரவு வரை டி.வி. பார்ப்பாங்க, அதுக்கு அப்புறம் அசந்து தூங்கிருவாங்க, அதனால மக்கள்தொகை பெருக்கம் குறைஞ்சிடும். அப்படினு நான் சொல்லீங்க, அதே மத்திய அமைச்சர் தான் சொல்றாரு.

அடுத்து நீங்க என்ன கேட்க வர்றீங்கனு தெரியுது, அதை போன் பண்ணி கேளுங்க சொல்றேன்.

Post a Comment